தலிபான்களை அங்கீகரிக்குமா உலக நாடுகள்?- தலிபான்களின் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன ?

ஆப்கானிஸ்தானில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள தாலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது... தலிபான்களின் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தலிபான்களை அங்கீகரிக்குமா உலக நாடுகள்?- தலிபான்களின் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன ?
x
ஆப்கானில் 20 ஆண்டுகால போர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், புதிதாக தலிபான்களின் கீழ் அமைய உள்ள அரசு பல்வேறு நெருக்கடிகளை சமாளித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலகின் ஏழ்மையான நாடுகளுள் ஒன்றாக ஆப்கானிஸ்தானின் 4 கோடி மக்களின் எதிர்காலம் தற்போது தலிபான்கள் கையில் உள்ளது.தீவிரவாதிகளின் கூடாரமாக விளங்கி வரும் ஆப்கானை கையாளுவது குறித்து முக்கிய முடிவுகளை உலக நாடுகள் எடுக்க உள்ள நிலையில், தனது எல்லையை பகிரும் நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறார்கள், தலிபான்கள்.பல நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்ற நிலையில், தற்போதும் காபூலில் உள்ள சீன மற்றும் ரஷ்ய தூதரங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் தற்போது ஆப்கானில் உள்ள சுமார் 2 கோடி மக்கள், ஏதேனும் உதவி கிடைக்காதா? என்ற நிலையில் தவித்து வருவதாக தெரிவித்துள்ளது, ஐநா அமைப்பு. ஆப்கானில் உள்ள பாதிக்கும் மேலான குழந்தைகளிடம், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதையும் ஐ.நா. கண்டறிந்துள்ளது.
இருப்பினும் மூன்று லட்சம் கோடி அளவிற்கு தங்கம் போன்ற கனிம வளங்கள் நிறைந்த ஆப்கானிஸ்தானுடனான வணிக ரீதியான தொடர்பில் பல நாடுகளும் விருப்பம் கொண்டுள்ளன. இந்நிலையில், தாலிபான்களின் ஆட்சியின் கீழ் அமைய உள்ள அரசில் பெண்கள் மற்றும் அந்நாட்டின் சிறுபான்மையினர் இடம்பெற்றிருக்க வேண்டும் என  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க வெளியேறியது, காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டும்,  சவப்பெட்டிகளில் அமெரிக்காவின் கொடிகளை போர்த்தி ஊர்வலமாக எடுத்து சென்றும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தலிபான்கள்.நாட்டின் வளர்ச்சிக்காக அமெரிக்காவுடன் சுமூக உறவையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 
ஆனால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க சீன அரசின் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர், தலிபான்கள் ஆப்கானை விட்டு வெளியேறிய அமெரிக்கா, தனது ராணுவ ஆயுதங்கள் மற்றும் ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை செயலிழக்க செய்து விட்டு சென்ற நிலையில், தற்போது அமெரிக்க ராணுவ வாகனங்களில் தலிபான்கள் உலா வரும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது தற்போது காபூல் வீதிகளில் மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள போதிலும், வறுமை மற்றும் வருமானத்திற்கு வழியில்லாததால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாகிஸ்தான் எல்லையில் தஞ்சமடைந்து வருகின்றன..தற்போது தொடர் தாக்குதல் காரணமாக சேதமடைந்துள்ள காபூல் விமான நிலையத்தை சீரமைத்து மீண்டும் விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்று தெரியாத நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஐந்து லட்சம் ஆப்கானியர்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான் அல்லது ஈரானுக்கு இடம்பெயரக்கூடும் என கணித்துள்ளது, ஐநா அமைப்பு.
தொடர்ந்து ஆப்கானை விட்டு மக்கள் வெளியேற தாங்கள் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா உட்பட 97 நாடுகள் அறிவித்துள்ளன

Next Story

மேலும் செய்திகள்