ஆப்கானை விட்டு வெளியேறிய அமெரிக்கா - விமான நிலையத்தில் மயான அமைதி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றுவிட்ட சூழலில், தலைநகர் காபூலில் தற்போதைய நிலவரம் என்ன? மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? விரிவாக பார்ப்போம்...
2001 செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து, அல்கொய்தாவை ஒடுக்க ஆப்கானிற்குள் நுழைந்தது அமெரிக்க படைகள்..
அன்று முதல் 20 ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள், தற்போது முழுவதுமாக வாபஸ் பெறப்பட்டுவிட்டது.. ஆகஸ்ட் 30ம் தேதியன்று கடைசி வீரராக கிறிஸ் டோனஹ்யூ தாயகம் புறப்பட்டார் என செய்தி வெளியிட்டது அமெரிக்க பாதுகாப்புத்துறை..இந்த தருணத்தை வாண வேடிக்கையாலும், கார்களில் ஹெட்லைட்டை ஒளிரவிட்டும், விசில் அடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் ஆபகன் மக்கள் 20 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் அதிக சேதத்தை உண்டாக்கியதாகவும், ஆப்கன் மக்கள் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என மகக்ள் கருத்து தெரிவித்துள்ளனர் .அமெரிக்கர்கள் வெளியேறிவிட்டார்கள்... வெளிநாட்டு படைகள் சென்றுவிட்டதால் தாயகத்தை வலுவாக கட்டமைக்க வேண்டும்... அரசியல் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் கலைத்து, நாட்டில் அமைதி மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட வேண்டும்...)வீரர்களின் தியாகம், முன்னோர்களின் வழிகாட்டுதலால் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கியதாக தலிபான் செய்தி தொடர்பாளர் வீரர்கள் முன்னிலையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.உங்களது தியாகத்தை போற்றுகிறோம்... உங்களாலும், நமது முன்னோர்களாலும் ஆப்கனுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது... இது ஆப்கான் மக்களுக்கான பூமி... இனி யாரையும் ஆக்கிரமிக்க விடக்கூடாது.. நாம் அதிகம் இழந்துவிட்டோம்.. மக்களிடம் கணிவாக நடந்துக்கொள்ளுங்கள்..)கொண்டாட்டம் ஒருபக்கம் என்றால், அமெரிக்கர்கள் வெளியேறிய பின்னர் காபூல் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சேதமடைந்த கார்கள், ஆயுத டேங்கர்கள், குவியல்களாக கிடந்த துணிகள் என போருக்கு பிந்தைய தருணத்தை கண் முன் கொண்டு வந்தன.. இதுஒருபுறம் இருக்க, 20 நாட்களாக வேலைக்கே செல்லவில்லை என கண்ணீர் வடிக்கும் காபூல் மக்கள், பசி பட்டினியில் சிக்கி தவிப்பதால் வேலைக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.பசி, பட்டினி, வேலையின்மையால் அல்லல்படும் சூழலில், தங்களது தேவையை பூர்த்தி செய்து அமைதியான சூழலில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே ஆப்கன் மக்களின் கோரிக்கை...
Next Story