"ஆப்கானில் முதலீடு செய்ய வேண்டும்" - பிறநாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுப்பு
வெளிநாடுகள் ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய, தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வெளிநாடுகள் ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய, தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து பேசிய தலிபான் அமைப்பினர், பிற நாடுகள் தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், அனைத்து நாடுகளுடனான நட்புறவையே தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஆப்கானிஸ்தான் நாடானது அரசியல் சுதந்திரத்தைப் பெற்று விட்டதாகவும், அதே போல பொருளாதார சுதந்திரத்தை எட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், சில நாடுகள் தங்களைத் தொடர்பு கொண்டு, ஆப்கானில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் அளித்துள்ளனர்.
Next Story