காற்றில் பறந்த தலிபான்களின் வாக்குறுதி: பெண்கள் மீது மீண்டும் அடக்குமுறையா..?
ஆப்கானிஸ்தானில் மாணவ, மாணவிகள் ஒரே வகுப்பில் படிக்க தடை, மாணவிகளுக்கு ஆசிரியர் பாடம் எடுக்க கூடாது உள்ளிட்ட தலிபான்களின் கட்டுப்பாடுகளால் பெண் உரிமைகள் மீண்டும் கேள்வி குறியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுப்பட்டில் வந்த போது அங்குள்ள பெண்களின் உரிமைகள் கேள்விக்குறியானது. எனினும், இஸ்லாமிய சட்டத்தின்படி பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்ற தலிபான்கள் கூறினர். இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஷேக் அப்துல்பாகி ஹக்கானி காபூலில் இருபாலர் வகுப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் பிற இசை நிகழ்ச்சிகளில் பெண்களின் குரல் ஒலிக்க தடை, ஊடகங்களில் பணிபுரிந்து வந்தபெண்கள் பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. . இதனிடையே கடந்த 20 ஆண்டுகளாக தங்களுக்கான உரிமைகளை பெற்று வந்த பெண்கள் மீண்டும் தலிபான்களின் கடுப்பாடுகளால் நசுக்கப்படுவதாக ஆப்கன் பெண் ஒருவர் கூறியுள்ளார்.
Next Story