மெக்சிகோவில் கடும் சூறாவளி: கொட்டித் தீர்த்த கனமழை
மெக்சிகோவின் வளைகுடா கடற்கரை நோக்கி வீசிய கடுமையான சூறாவளிக் காற்று பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
எண்ணெய் உற்பத்தி அதிகம் நடைபெறும் மாநிலமான வெராக்ரூஸ் மற்றும் மத்திய மெக்சிகோ பகுதிகளை பலத்த காற்றும் கனமழையும் அச்சுறுத்தின. வெராக்ரூஸ் பகுதி சூறாவளியால் மேலும் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை கரீபியன் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சூறாவளியால் ஏராளமான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்தன. ஆனால் இதுவரை உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.
Next Story