ஆப்கனை அபகரித்த தலிபான்கள்: தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினரின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து உள்ளது.
ஆப்கனை அபகரித்த தலிபான்கள்: தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்
x
அமெரிக்க அரசின் சட்டங்களின்படி தலிபான் அமைப்பு, பயங்கரமான தீவிரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால்,  விதிமுறைகளின்படி அவர்களுடைய ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானின் உள்ளூர் மொழிகளை பேசும் வல்லுநர் குழுக்கள் தங்களிடம் இருப்பதாகவும், புதிய கணக்குகளை தலிபான்கள் தொடங்கினால், வல்லுநர் குழுவினர் அதை கண்காணித்து தங்களுக்கு தகவல் அளிப்பார்கள் என்றும் ஃபேஸ்புக் தெரிவித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்