அமேசானில் இருந்து விலகிய உலகின் மிகப் பெரிய பணக்காரர் - ஜெப் பெசோஸின் அடுத்த திட்டம் என்ன?

உலகின் மிகப் பெரிய பணக்காரரான, ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினார்.
அமேசானில் இருந்து விலகிய உலகின் மிகப் பெரிய பணக்காரர் - ஜெப் பெசோஸின் அடுத்த திட்டம் என்ன?
x
உலகின் மிகப் பெரிய பணக்காரரான, ஜெப் பெசோஸ்  அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினார். இவரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், திட்டங்கள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்..உலகின் மிகப்பெரிய  இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தை 1994இல்  சிறிய அளவில் தொடங்கிய ஜெப் பெசோஸ், கடந்த 27 ஆண்டுகளில், அதை மிகப் பெரும் நிறுவனமாக வளர்த்தெடுத்தார். 
15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளை உடைய ஜெப் பெசோஸ், புளு ஆரிஜின் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை 2000இல் தொடங்கினார். 
ஜெப் பெசோஸ், அமேசான் நிறுவனம், புளு ஆரிஜின் விண் கலம், வாசிங்கடன் போஸ்ட் இதழ் அமேசான் நிறுவனத்தின் நிர்வாகத்தை விட்டு விலகிய பின், பல்வேறு பணிகள் மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபட உள்ளதாக ஜெப் பெசோஸ் கூறியுள்ளார்.ஜூலை 20 அன்று அவரது சகோதரர் மார்க் பெசோஸுசன், புளு ஆரிஜின் விண் கலத்தில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.பெசோஸ் அறக்கட்டளை மூலம் பொது தொண்டுகளில் ஈடுபட உள்ளார். புவி வெப்பமயமாதலை தடுக்க, பெசோஸ் எர்த் பன்ட் என்ற நிதியை, 74,370 கோடி அளித்து தொடங்கியுள்ளார். இதன் செயல்பாடுகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். புகழ் பெற்ற வாஷிங்டன் போஸ்ட் என்ற தின இதழை, 1859 கோடி ரூபாய்க்கு 2013இல் வாங்கினார். திவால் நிலையில் இருந்த இந்த தின இதழை மீட்டெடுத்தார்.வாஷிடன் போஸ்ட் இதழின் நிர்வாகத்தில் கவனம் செலுத்த ஜெப் பெசோஸ் திட்டமிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்