ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் அமெரிக்கா - ஜோ பைடனை சந்திக்க உள்ள ஆப்கன் அதிபர்
வரும் வெள்ளியன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளார்.
வரும் வெள்ளியன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளார். இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
2001இல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல்களுக்கு காரணமான அல் கொய்தா இயக்கத்தை அழிக்க, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா, கடந்த 20 ஆண்டுகளாக அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வருகிறது.
தலிபான் படையினரை அழிக்க முடியாததால், இந்த ஆண்டு செப்டம்பருக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு முழுவதுமாக வெளியேற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
BREATH.. ஆபாகானிஸ்தான், தலிபான் படையினர், அமெரிக்க ராணுவம், ஜோ பைடன், அஸ்ரப் கனி
இந்நிலையில், வரும் வெள்ளியன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி மற்றும் ஆப்கானிஸ்தான் தேசிய குழுவின் தலைவர் அப்துல்லா அப்துல்லா, சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளார் ஜென் சாகி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ராஜாங்க, பொருளாதார ரீதியான உதவிகளை அளித்து, பெண்கள், சிறுமியர் மற்றும் சிறுபான்மையினருக்கு தேவையான உதவிகளையும், ஆதரவையும் அமெரிக்கா தொடர்ந்து செய்துவரும் என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றும், இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை.
அமெரிக்க படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுவரை 40 மாவட்டங்களை தலிபான் படையினர் கைபற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தொடர உள்ளதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story