பெலாரசில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் - அதிபருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
பெலாராஸ் நாட்டில் அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெலாராஸ் நாட்டில் அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெலராசில் ஏற்பட்டுள்ள அரசியல் குளறுபடிகளை கண்டித்து அந்நாட்டு மக்கள் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அதிபருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், இசை கருவிகள் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கொரோனா எதிரொலி - வறுமையில் சிக்கிய நாடு மக்கள்
அர்ஜென்டினா அரசை கண்டித்து அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக அர்ஜென்டினாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு மக்கள் தங்கள் அன்றாட வாழ்வாதரத்தை இழந்தனர். இதனால் வறுமையின் பிடியில் சிக்கிய மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா எதிரொலியாக அர்ஜென்டினா பொருளாதாரம் 19 சதவீதமாக குறைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அது மேலும் 12 சதவீதமாக குறையும் என்று அந்நாட்டு பொருளாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெக்க மசூதியில் பிரார்த்தனைக்கு அனுமதி - 7 மாத தடை முடிவுக்கு வந்தது
ஏழு மாத தடைக்கு பிறகு புகழ்பெற்ற அல் ஹராம் மெக்கா மசூதியில் பிரார்த்தனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் எதிரொலி காரணமாக அல் ஹராம் மெக்கா மசூதியில் பிரார்த்தனை செய்ய சவுதி அரேபிய அரசு தடை விதித்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் பிரார்த்தனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேவாலய ஆராதனையில் பங்கேற்று காணிக்கை செலுத்திய டிரம்ப்
வருகிற 22 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பங்கேற்கும் இறுதிச் சுற்று விவாதம் புளோரிடாவில் நடைபெற உள்ளது. அதுவரை அதிபர் டிரம்ப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக, செய்தி தொடர்பாளர்
டிம் முர்டாக் தெரிவித்துள்ளார். அரிசோனா, வடக்கு கரோலினாவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், நேற்று நெவாடாவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்று, தனது காணிக்கையை செலுத்தினார். அப்போது, அவருடைய வெற்றிக்காக அங்கிருந்தவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
லிபியாவில் சிக்கிய இத்தாலி மீனவர்கள் - போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை
வார்டிகானில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட போப் பிரான்சிஸ் இத்தாலி மீனவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். புனித பீட்டர் சதுக்கத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உறையாற்றிய போப் பிரான்சிஸ் லிபியா எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இத்தாலி மற்றும் துனிசியா மீனவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
தேவாலய கோபுரம் தீயில் எரிந்து சேதம்
சமச்சீரின்மையை எதிர்த்து மக்கள் கடந்தாண்டு சிலி நாட்டு மக்கள் நடத்திய போராட்டத்தில் 30 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இதன் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று தலைநகர் சாண்டிகோவில் நடைபெற்றது. பிளாசா இத்தாலியா அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில், அங்கிருந்த தேவாலயம் ஒன்றிற்கு பரவிய தீயால், அதன் கோபுரம் முற்றிலும் எரிந்து விழுந்தது.
பிரதமருக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - கோஷங்கள் எழுப்பி எதிர்கட்சிகள் போராட்டம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கண்டித்து அந்நாட்டு எதிர் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கராச்சியில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்கட்சி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த 16-ந்தேதி இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
கார் குண்டு வெடிப்பில் 12 பேர் பலி : 100 -க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஆஃப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான கோரில், நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். 100 - க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆஃப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக, அந்நாட்டு அரசு, தலிபான் தீவிரவாதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், நிகழ்ந்த இந்த தாக்குதல் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ரியோ டி ஜெனிரோவில் இசை நிகழ்ச்சி/ரசிகர்களுக்காக 'பாக்ஸ்' அமைப்பு
பிரேசிலில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் ரியோ டி ஜெனிரோ நகரில் சிறப்பு நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பாதுகாப்புடன் உற்சாக நடனமாட சிறப்பு பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பாக்ஸ் ஒன்றில் 6 ரசிகர்கள் நின்று ஆடிப்பாடி நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
Next Story