"தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சமூக அளவில் நினைவுகூர அனுமதிக்க முடியாது" - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை எந்த வகையிலும் நினைவுகூர முடியாது என இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சமூக அளவில் நினைவுகூர அனுமதிக்க முடியாது - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்
x
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை எந்த வகையிலும் நினைவுகூர முடியாது என இலங்கை  ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பின்லாடனை சுட்டுக்கொன்றதன் பின்னர் அவருடைய சாம்பலை கூட அவர் சார்ந்த தரப்பினருக்குக் கொடுக்காமல் அமெரிக்கா நிராகரித்ததை சுட்டிக்காட்டி உள்ளார். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர், எந்தவொரு போதைப் பொருள் கடத்தல்காரர், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அப்படிப்பட்டவர்களை அவர்களது குடும்பத்திற்குள் வீட்டில் தானம் வழங்கி நினைவுக்கூர முடியும் என்றும், அதற்கான வரம்புகள் உள்ளன என அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், அந்த நினைவுக் கூரலை சமூக மயப்படுத்தினால் சமூகத்திற்குள் செய்தால் இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் நபராக இருந்திருந்தால் அது பிரச்சினைக்குரிய விசயமாகும் என எச்சரித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்