கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் உதவ வேண்டும் - வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கெடு
கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் உலக நாடுகள் இணைந்து கொள்ள வரும் வெள்ளிக்கிழமை வரை கெடு விதிப்பதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானெம் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் உலக நாடுகள் இணைந்து கொள்ள வரும் வெள்ளிக்கிழமை வரை கெடு விதிப்பதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானெம் கூறியுள்ளார். குறைந்த வருமானம் உடைய 92 நாடுகள் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளதாகவும், 80 வளர்ந்த நாடுகள் உதவு முன்வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறைந்த வருமானம் உடைய நாடுகளில் கொரோனா தாக்கம் தொடர்ந்தால் அது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை வளர்ந்த நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என டெட்ரோஸ் அதானெம் கூறியுள்ளார்.
Next Story