"மருந்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு நிர்பந்தம் செய்யவில்லை" - அமெரிக்கா

கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்க எப்.டி.ஏ.வை யாரும் நிர்பந்திக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மருந்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு நிர்பந்தம் செய்யவில்லை - அமெரிக்கா
x
கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்க  எப்.டி.ஏ.வை யாரும் நிர்பந்திக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஊடகத்தினரை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கெயிலெஹ் மெக்னானி, மக்களின் நலன்கருதி, கொரோனாவுக்கு எதிரான மருந்தை உடனடியாக கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறினார். ஒப்புதல் தொடர்பாக அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், தேர்தலுக்கு முன்பாக செய்துவிடுமாறு மட்டுமே அதிபர் ட்ரம்ப் பேசியதாக தெரிவித்த கெயிலெஹ், ஊரடங்கை அமல்படுத்தாமல், மருந்துக்கு தேவையான நிதியை திரட்டுவோம் என்றார். 


கறுப்பு இனத்தவர்கள் மீது போலீஸ் தாக்குதல்- கண்டனம் 


அமெரிக்காவில் நடக்கும் இன ரீதியான அநீதிகளை ஏற்க முடியாது என  அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ  பிடன் தெரிவித்துள்ளார். கெனோஷா பகுதியில் பேசிய அவர், கறுப்பினத்தவருக்கு எதிராக அநீதிகள் நடப்பதாகவும், போலீசாரின் அத்துமீறலும் ஏற்கமுடியாதவை என்றார். கறுப்பினத்தைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் சுடப்பட்ட இடத்தில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நினைவு கூர்ந்த பிடன், தனது வருகைக்கும், டிரம்ப் வருகைக்கும் டன் கணக்கிலான வித்தியாசம் இருப்பதாக கூறினார். அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற பதற்றமான நிலை ஏற்பட்டதில்லை என்ற பிடன், நேர்மறையான பாதையில் நாட்டைச் செலுத்த வேண்டும் என கூறினார். 

கடல்வழியாக புலம்பெயர்ந்த 416 அகதிகள் மீட்பு - இங்கிலாந்தில் தஞ்சம்-"தொடர் நுழைவை நிறுத்த வேண்டும்"

பல்வேறு நாடுகளில் இருந்து கடல்வழியாக ரப்பர் படகுகளில் வந்த புலம்பெயர்தோரை, இ​ங்கிலாந்து கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். கடல்வழியாக வந்த பலர், எங்கு செல்வது என தெரியாமல் கடற்கரையில் உலவினர். டோவர் கடற்கரையில் இருந்து மட்டும் இதுவரை மொத்தம் 416 பேரை மீட்டுள்ளதாக இங்கிலாந்து எம்.பி. தெரிவித்தார்.  பிரான்ஸ் அகதிகள் மூவாயிரம் பேரை திருப்பி அனுப்பியதாக கூறிய அமைச்சர் கிரிஸ் பிலிப், புலம்பெயர்வோர் இங்கிலாந்துக்குள் நுழைவதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்றார்.  

 5 குழந்தைகளை கொன்ற தாய் - ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை முயற்சி 


ஜெர்மன் நாட்டின் சொலின்ஜென் நகரில், ஐந்து குழந்தைகளை கொன்ற தாய், ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பலத்த காயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் கிடந்த ஐந்து குழந்தைகளின் சடலத்தை மீட்ட போலீசார், இதற்கான காரணம் குறித்து அக்கம்பக்கத்தினர், நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விமானநிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - மருத்துவ காப்பீடு வழங்க கோரிக்கை 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் விமானநிலைய ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விமானநிலைய வளாகத்தில் தரையில் படுத்துக் கொண்டு, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளை வைத்திருந்தனர். கொரோனா நெருக்கடி நிலையில், தங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்