வடகொரியாவின் இளைஞர்கள் தினம் - கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்

வடகொரியாவின் இளைஞர்கள் தினம், அந்நாட்டின் தலைநகர் பியொங்யாங் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வடகொரியாவின் இளைஞர்கள் தினம் - கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்
x
வடகொரியாவின் இளைஞர்கள் தினம், அந்நாட்டின் தலைநகர் பியொங்யாங் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திறந்த வெளியில், நடந்த கொண்டாட்டத்தில், கலைஞர்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி, பாட்டுபாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். இளைஞர்கள் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், செல்போனில் லைட் அடித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு- ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டங்கள்


கொரோனாவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளில், போராட்டங்கள் வலுத்துள்ளன.ஜெர்மனியின் பெர்லின் நகரில், ரஷ்ய தூதரகம் முன்பு கூடிய போராட்டாக்காரர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும்
திடீர் என்று போலீசார் மீது பாட்டில்கள், மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்த துவங்கினர். இதனால் போலீசார், போராட்டக்காரர்களை பிடித்து, கைது செய்தனர். அப்போது சிலர் ஒத்துழைக்க மறுத்ததால், இரு தரப்பு இடையேயும், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


"முக கவசம் கட்டாயம்" - ஃபிரான்ஸ் அரசு அறிவிப்பு

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில், கொரோனா கட்டுப்பாடுகளை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஃபிரான்ஸ் நாட்டில், பொது இடங்களில் நடமாடுவோர், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சுதந்திரமாக சுவாசிக்க விடுங்கள் என கூறி, முக கவசங்களை கழற்றி, வீசி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு -  நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

சமூக இடைவெளி, முக கவசம் கட்டாயம், பொது வெளியில் நடமாட தடை உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து லண்டனில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Trafalgar சதுக்கத்தின் முன்பு குவிந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், கொரோனா கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


கொரோனா பாதிப்பை முறையாக கையாளவில்லை " - இஸ்ரேலில் பிரதமருக்கு  எதிராக வலுக்கும் போராட்டம்



இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்,. அவர், கொரோனா பாதிப்பை முறையாக கையாளவில்லை என்றும், அதனால்  கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த நிலையில் தலைநகர் ஜெருசலேமில் உள்ள நேட்டன்யாஹூவின் அரசு இல்லம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நேட்டன்யாஹூவை பதவி விலக வலியுறுத்தி கண்டன கோஷங்களை  எழுப்பப்பட்டது,. நேட்டன்யாஹூ   ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கியுள்ள  நிலையில்,  நாட்டின் பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகினறனர்,.  இதனால்  நேட்டன்யாஹூ   கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,.


40 டால்பின்கள் உயிரிழந்த விவகாரம் - வீதியில் இறங்கி போராடும் மொரிசியஸ் மக்கள்

மொரிசியஸ் தீவில் 40 டால்பின்கள் உயிரிழந்ததைக் கண்டித்து, அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் நடந்த போராட்டத்தின் போது, மக்கள் டிரம்ஸ் வாசித்தும், முழக்கங்கள் எழுப்பியும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். டால்பின்கள் உயிரிழப்புக்கான காரணங்கள் மர்மமாகவே இருப்பதாக கூறிய அவர்கள், ஜப்பான் கப்பல் எண்ணெய் கசிவால், கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.

ஷியா பிரிவினர் அனுசரித்த "அஷூரா - புனித நாள்" - சமூக விலகல், முக கவசத்துடன் ஊர்வலம்

ஈராக் நாட்டின் கெர்பலாவில், இஸ்லாமியர்களின் ஷியா பிரிவினர், அஷூரா எனும், புனித நாளை, அனுசரித்தனர். இதனை ஒட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில், முக கவசங்களுடன், சமூக இடைவெளியுடன், பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்றனர். இந்த புனித நாளை ஒட்டி, கெர்பலாவின் பல்வேறு இடங்களில், கிருமி நாசினி தெளிப்பான்கள், உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தன. ஈராக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை நெருங்குவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்