குடியிருப்பில் உலா வந்த குட்டி கங்காரு - கங்காருவை பாதுகாப்பாக மீட்ட போலீஸ்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் லவுடர்டேல் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி கங்காருவை, காவல்துறையினர் மீட்டனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் லவுடர்டேல் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த குட்டி கங்காருவை, காவல்துறையினர் மீட்டனர். பின்னர், போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட அந்த குட்டி கங்காரு, தொலைதூரத்தில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.
அரிய வகை லெமூர் இன இரட்டையர்கள் - உயிரியல் பூங்காவுக்கு புது வரவான விலங்கு
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள
சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில், அரிய வகை லெமூர் இன இரட்டையர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் பிறந்த இந்த இரட்டையர்களுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அடையாள நோக்கத்திற்காக, அவற்றின் தோலில் மைக்ரோ சிப்கள் பொருத்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாரம்பரியமிக்க களிமண் பூசும் திருவிழா, கொண்டாட்டம் - கொரோனா அச்சம் -வீடுகளில் கொண்டாடிய மக்கள்
தென்கொரியாவில், பாரம்பரியமிக்க களிமண் பூசும் திருவிழா, வீடுகளிலேயே கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக, குவாங்ஜூ நகரில் ஆன்லைன் மூலம், ஆர்டர் செய்யப்பட்ட களிமண், மற்றும் வண்ணப்பொடிகளை, உடல் முழுவதும் பூசிக் கொண்டு, குழந்தைகளும் பெரியவர்களும், வீடுகளில், திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த திருவிழாவை ஆண்டு தோறும், நூற்றுக்கணக்கானோர்,ஒன்று கூடி மிகப்பெரிய மைதானத்தில் விளையாடுவது வழக்கம். தற்போது கொரோனா அச்சம் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ளவர்களுக்கு, களிமண் திருவிழா மன அழுத்தத்தை குறைத்துள்ளது.
Next Story