கொரோனா தொற்றுக்கு பிரிட்டனில் 24 ஆயிரம் பேர் உயிரழப்பு
கொரோனா தொற்றுக்கு பிரிட்டனில் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு விதிமுறைகளை தளர்த்துவது ஆபத்தில் முடியும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றை வெற்றிக்கரமாக கையாண்டதாக, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த நிலையில், செவ்வாய்கிழமை வெளியான புள்ளி விவரங்கள் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இங்கிலாந்தில் மட்டும் ஏப்ரல் 17 வரையிலான காலக்கட்டத்தில் 21 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தை சேர்த்தால் இது 24 ஆயிரம் உயிரிழப்பாக உள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை நடந்த உயிரிழப்புகளில் இது அதிகம் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் இருந்து பிரிட்டன் விடுபட முன்னெச்சரிக்கை முறைகள் மற்றும் சோதனைகள் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று முதல் அந்த தகவல்கள் தெரிவிக்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மோசமடைந்து வரும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு, கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை தளர்த்தினால் இரண்டாம் கட்டமாக கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அழற்சி நோயால் குழந்தைகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் இறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணியை தொடங்கி உள்ளனர்.
Next Story