"இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடிப்பு" - இந்திய மீனவர்கள் மீது இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகார்
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபடுதாகவும், இதுதொடர்பாக இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார். இந்திய மீனவர்களின் அத்துமீறலால் இலங்கையின் வளம் சுரண்டப்படுவதுடன், உள்ளூர் மீனவர்களின் பொருட்கள் அழிக்கப்படுவதாவும் அவர் தெரிவித்தார். இதற்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
Next Story