ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிரிட்டன் - பிரிட்டனில் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் இன்று நள்ளிரவு 12 அதிகாரப்பூர்வமாக பிரியும் நிலையில், என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து விளக்கம்
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிரிட்டன் - பிரிட்டனில் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன?
x
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என பிரிட்டனில் பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து  கடந்த 2016 ஆம்  ஆண்டு மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டு அதில் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது. 

பிரெக்ஸிட் விவகாரத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த டேவிட் கேமரூன் மற்றும் தெரசா மே ஆகிய இரு பிரதமர்கள் ராஜினாமா செய்தனர். 

அதே சமயம்,  வலது சாரி சிந்தனைகள் கொண்ட, தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால் பிரெக்சிட் சாத்தியமானது. 

பிர​க்சிட்  வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து,  இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதற்கு ஒப்புதலை அளித்தார். 

இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.  

இந்நிலையில், பிரக்சிட் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில்,  நீண்ட விவாதம் நடைபெற்றது. 

பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரிட்டன் உடன்பாட்டுக்கு  ஆதரவாக 621 பேர் வாக்களித்தனர். எதிராக 49 வாக்குகள் பதிவாகின. 

இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் இருந்த விலகி செல்லும் பிரிட்டனால், அதிகாரம், வர்த்தகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. 

ஜனவரி 31 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறினாலும், 2021 ஆண்டு வரை, பழைய நிலையே நீடிக்கும் என்றும் அதன் பிறகே மாற்றங்கள் ஏற்படும். 

அதிகாரத்தை பொறுத்தவரை, ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன், பெயரளவிற்கு ஒரு உறுப்பினராக மட்டுமே இனி செயல்படும். 

அதே சமயம், நிதி சார்ந்த சேவைகளில் இருந்து கார் தயாரிப்பு வரையிலான ஐரோப்பிய யூனியன் கொள்கை அமைப்பில் பிரிட்டன் இனி தலையிடாது என கூறப்படுகிறது. 

2021 ஆம் ஆண்டு வரை, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனில் தங்கி, பணியாற்றிக்கொள்ளலாம். 

அதே சமயம், பிரிட்டனில் குடியேறியுள்ள ஐரோப்பிய கூட்டமைப்பினர் 35 லட்சம் பேர் வெளியேறிவிட வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு கேட்டு கொண்டுள்ளது. 
 



Next Story

மேலும் செய்திகள்