கலகலப்பான பாரம்பரிய தக்காளி சண்டை - செக்க சிவந்த ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டின் பியுனோல் நகரில், இந்தாண்டுக்கான பாரம்பரிய தக்காளி சண்டை களைகட்டியது.
ஸ்பெயின் நாட்டின் பியுனோல் நகரில், இந்தாண்டுக்கான பாரம்பரிய தக்காளி சண்டை களைகட்டியது. 6 லாரிகளில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 542 கிலோ தக்காளி பழங்கள் பியுனோல் நகருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது தக்காளி பழங்கள் வீசப்பட்டன. பின்னர் ஒருவர் மீது ஒருவர் தக்காளி பழங்களை வீசி சண்டை போட்டனர். தெருவில் குளம் போல் இருந்த தக்காளி பழச்சாறில் பொதுமக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தக்காளி சண்டையால், ஸ்பெயின் நகரம் செக்க சிவப்பாக காட்சி அளித்தது.
Next Story