ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் : 20 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் துணை அதிபர் வேட்பாளர் அலுவலகத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற செப்டம்பர் 28 ம் தேதி நடைபெற இருக்கிறது. ஆப்கானிஸ்தான் துணை அதிபர் தேர்தலில், அம்ருல்லா சாலோ என்பவர் போட்டியிடுகிறார். காபூலில் உள்ள தனது அலுவலகத்தில் அம்ரகுல்லா சாலோ இருந்தபோது, வெடிகுண்டு நிரப்பிய காருடன் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள், கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த வெடிகுண்டு தாக்குதலில், 20 பேர் பலியானார்கள். கட்டிடம் சேதம் அடைந்த நிலையில், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலில், துணை அதிபர் வேட்பாளர் அம்ருல்லா, அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
Next Story