"இந்தியா - ஜப்பான் நட்புறவு நீடித்து நிலைத்துள்ளது" - பிரதமர் மோடி
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்றுள்ளார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்நிலையில் கோப் நகரில், இந்திய வம்சாவளியினரிடையே, பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, 130 கோடி இந்தியர்கள், ஒன்றிணைந்து ஒருமித்த கருத்துடன், பெரும்பான்மையான வலிமையான அரசை மீண்டும் தேர்வு செய்திருப்பதாக பெருமிதத்துடன் கூறினார். அனைவரோடு இணைந்து, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி, பயணத்தை துவங்கியிருப்பதாகவும், இது இந்தியாவை மேலும் வலிமையாக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். சுவாமி விவேகானந்தா, ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர், ஜப்பான் உடனான உறவை வலுப்படுத்தியதாக பிரதமர் மோடி கூறினார். இந்தியா - ஜப்பான் நாடுகளின் கலாசாரத்தை, ஒருவருக்கொருவர் மதிப்பதாலேயே, நட்புறவு நெடுங்காலமாக நீடித்து இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பிரதமர் மோடி, உரையை முடித்த உடன், அங்கிருந்த இந்தியர்கள், 'வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம்' என, முழக்கமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story