போயிங் 737 விமானங்களை தடை செய்யும் நாடுகள்

5 மாதங்களில் 2 விமான விபத்து
போயிங் 737 விமானங்களை தடை செய்யும் நாடுகள்
x
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா நாடுகள் போயிங் 737  மேக்ஸ் விமானத்துக்கு தடை விதித்துள்ளன.அமெரிக்காவை சேர்ந்த போயிங் விமான நிறுவனம் தயாரிக்கும் 737 மேக்ஸ் விமானங்கள், கடந்த 5 மாதங்களில் 2 விபத்துகளைச் சந்தித்துள்ள.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  இந்தோனேசியாவின் லயன் ஏர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்த விபத்தில் 189 பேர் பலியாகினர்.இந்த நிலையில் சமீபத்தில் எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன் காரணமாக பல நாடுகள் இந்த விமானத்தை இயக்க தடை செய்துள்ளதுடன், புதிய விமானங்களை வாங்கும் ஒப்பந்தங்களையும் மாற்றி வருகின்றன. இதற்கிடையே இந்த சூழலை கவனித்து வருவதாக இந்திய விமான போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்