எருது விரட்டு திருவிழா- "சான் பெர்மின்"

காளைகளிடம் சிக்காமல் ஓடுவதே திருவிழா
எருது விரட்டு திருவிழா- சான் பெர்மின்
x
ஸ்பெயின் நாட்டின், பம்லோனாவில்(pamplona) எருது விரட்டு திருவிழாவான "சான் பெர்மின்"(San Fermin) யின் மூன்றாவது நாள் விழா, கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, ஏராளமான காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது, வீதியில் திரண்டிருந்த மக்கள், காளைகளிடம் அகப்படாமல் ஓடி, ஒதுங்கினர்.இதில் பாரம்பரியமான வெள்ளைச் சட்டை அணிந்தும், விழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் சிவப்பு துண்டை கழுத்தில் அணிந்தும் மக்கள் கலந்து கொண்டனர். எட்டு சுற்றுகளாக நடத்தப்படும் இந்த போட்டி, ஜூலை 14 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்