ஜி 20-ல் நடராஜர் சிலை ஏன்? - தெலங்கானா ஆளுநர் தமிழிசை விளக்கம்
இந்தியாவில் எங்கும் சிவன் தான் இருப்பார், ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் நடராஜர் இருப்பார் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி நகரில் ஜி 20 மாநாடு குறித்த நிகழ்ச்சிகள் நிறைவு விழா நடைபெற்றது. ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, சூரியனை சின்னமாக வைத்துள்ள சிலர், அதனை சுவரில் மட்டுமே வரைய முடியும் என்றும், ஆனால், தாங்கள் சூரியனுக்கே செல்ல தயாராகி விட்டதாக கூறினார். ஒரு காலத்தில் மேட் இன் சைனா மிகப்பெரிய அளவில் இருந்ததாகவும், தற்போது மேட் இன் இந்தியா என்று மாறிவிட்டதாகவும் தமிழிசை தெரிவித்தார்.
Next Story