"நான் தமிழ்நாடு வரும் போது எல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது" அனல் பறக்க பேசிய மோடி
பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தான் தமிழ்நாடு வரும் போது எல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைப்பதாகவும், பா.ஜ.க.விற்கு மக்கள் ஆதரவு வலுவடைவதே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டார். சென்னை வெள்ளநீர் மேலாண்மையை தி.மு.க. சரிவர செய்யவில்லை என சாடிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம் சட்டினார். மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குறிப்பிட்ட பிரதமர், தமிழ்நாட்டில் ஆளும் கட்சி ஆதரவுடன் போதைப்பொருட்கள் புழங்கி வருவது கவலை அளிப்பதாகவும், பா.ஜ.க.வை பலப்படுத்தினால் நடவடிக்கை விரைவு படுத்தப்படும் என்றார். சனாதன விவகாரத்தில் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை கொச்சைப் படுத்திவிட்டு இன்னமும் அமைச்சராக நீடிப்பது கவலைக்குரிய விஷயம் என்றும் அமைச்சர் உதயநிதியை மறைமுகமாக சாடினார்