அதிகாரிகளை பார்த்ததும் எகிறி ஓடிய நபர்.. பைக்கில் இருந்த பல லட்சம்

x

ராமேஸ்வரம் அருகே இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தப்பி சென்ற கடத்தல்காரரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் தங்கச்சிமடம் துறைமுகப் பகுதிக்கு, இலங்கையிலிருந்து தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தங்கச்சிமடம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், இருசக்கர வாகனத்தில் தங்க கட்டிகளை கடத்தி சென்ற நபரை பிடிக்க முயன்றனர். இருப்பினும் அந்த நபர் தப்பி சென்றுவிட்ட நிலையில், அவரிடமிருந்த 7 கிலோ தங்க கட்டிகள் மட்டும் சிக்கியது. சிக்கிய தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தப்பி சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்