நாங்க நிறுத்தமாட்டோம்..மீனவர்கள் அறிவிப்பு...

x

திருச்செந்தூர் அருகே தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதம், தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள், கடல் அரிப்பால் படகுகள் சேதம் அடையாமல் இருக்க தூண்டில் வளைவு பாலம் அமைத்தருமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு, 58 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால் அந்தப் பகுதி மீனவர்கள், கடந்த 7-ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். அவர்களுடன் மாவட்ட மறை ஆயர் ஸ்டீபன் அந்தோணி பிள்ளை பேச்சுவார்த்தை நடத்தி, பழச்சாறு கொடுத்து போராடத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இருப்பினும், தூண்டில் வளைவு அமைத்து தரக் கோரும் தங்கள் போராட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்