"நான் வருவாய்துறையில் பணிபுரிகிறேன்" - பெண் தலையில் மிளகாய் அரைத்து மோசடி -விருதுநகரில் பரபரப்பு
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றி இரண்டரை லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், அருப்புக்கோட்டை இந்திரா நகர் பகுதியில் வசித்துவரும் தனலட்சியிடம், தன்னை வருவாய் துறை அதிகாரி எனக்கூறி பழகி வந்த நிலையில், அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி இரண்டரை லட்ச ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வேலை பெற்றுத்தராமல் இழுத்தடித்து வந்த பன்னீர்செல்வம், பணத்தை திரும்பி கேட்ட தனலட்சுமியை தகாத வார்த்தையில் திட்டியதாக சொல்லப்படும் நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் பன்னீர் செல்வம் மீது வழக்குபதிவு செய்த போலீசார், குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருகின்றனர
Next Story