17 வயது மாணவனுக்கு லாட்ஜ்-ல் ரூம் போட்ட 40 வயது டீச்சர் - மகனின் ஒரு லெட்டரால் அதிர்ந்த தாய்
17 வயது மாணவனை காதலித்த, 40 வயது தனியார் பள்ளி ஆசிரியை மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், மந்திர ஓடை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 15ம் தேதி முதல் தன் மகனை காணவில்லையென, மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கினர். வீட்டில் இருந்து கிளம்பிய மாணவன் கல்லூரி சேரவுள்ளதாக கூறி, கடிதம் எழுதிவிட்டு சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் விசாரணை செய்த போது, காணாமல் போன மாணவனும், அதே பள்ளியில் பணிபுரிந்த 40 வயதான கணிணி அறிவியல் ஆசிரியை பாத்திமாகனியும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதை அறிந்த நிர்வாகம் பாத்திமாகனியை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்துள்ளனர். இந்த நிலையில்தான், புதுச்சேரியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த, மாணவனையும், பாத்திமாகனியையும் போலீசார் கண்டறிந்தனர். மணவனை கல்லூரியில் சேர்க்கவே புதுச்சேரியில் தங்கியதாக ஆசிரியை கூறிய நிலையில், பாத்திமாகனியின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆசிரியை பாத்திமாகனிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.