திருச்செந்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - சேதி கேட்டு அதிர்ந்து போன பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில் வண்ணபிள்ளை தெருவை சேர்ந்த பாக்கியஸ்வரன்- வசந்த் லட்சுமி தம்பதி திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கடந்த ஆறாம் தேதி திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளனார். நேற்று கணவனும் மனைவியும் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ரூமுக்கு வந்துள்ளனர். இன்று காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாக்கியஸ்வரன் பஞ்சு ஏற்றுமதி செய்து வந்ததாகவும் தொழிலில் கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மனைவியுடன் சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Next Story