ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்- விருதுநகரில் பரபரப்பு

x

அருப்புக்கோட்டை அருகே, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள், 300 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை பிடிஓ ரவி, கிராம மக்களை சமாதானப்படுத்தியதுடன், பணம் வாங்கினால் போலீசில் புகார் அளிப்பதாக, நூறுநாள் வேலை திட்ட பொறுப்பாளர்களை எச்சரித்தார். பின்னர், யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது என கிராம மக்களை அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்