"குடிப்பான் 10 நாள் பெட்ல இருப்பான் வந்துருவான்.. நோய் எதுவும் கிடையாது".. கதறும் உறவினர்கள்

x

விழுப்புரம் கிளை சிறையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், - உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். 33 வயதான இவர், கடந்த 2016-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவானதை அடுத்து, நீதிமன்றம் பிடிவாரண்ட் மூலம் அண்மையில் கைதானார். தொடர்ந்து, விழுப்புரம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சம்பவத்தன்று காலை சிறைக்குள் மூச்சு பேச்சில்லாமல் அற்புதராஜ் கிடந்ததை பார்த்து சிறை காவலர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். உடனே, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அற்புதராஜின் உறவினர்கள், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்த நிலையில், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் அற்புதராஜை அடித்து சிறைக்கு அனுப்பியதாகவும், அதனாலையே அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சுமத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்