மனைவி கிளப்பிய பகீர்.. தோண்டி எடுக்கப்பட்ட உடல்.. மீண்டும் போஸ்ட் மார்ட்டம்

x

விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்தவர் ராஜா. திருப்பச்சாவடிமேடில் உள்ள மதுபான பாரில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவரை, மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறி கடந்த 10 ஆம் தேதி போலீசார் கைது செய்த நிலையில், பின்னர் ஜாமினில் விடுவித்துள்ளனர். இதில், போலீசார் தன்னை தாக்கியதாக மனைவியிடம் ராஜா தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தனது கணவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், இதனால் அவரின் உடலுக்கு மீண்டும் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என ராஜாவின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜாவின் உடலை மீண்டும் மறு உட்ற்கூராய்வு செய்ய உத்தரவிட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி, ராஜாவின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட ரஜாவின் உடல், மறு உடற்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்