"குடும்ப தலைவிகளுக்கு ரூ.28,000 கடன்" - சி. விஜயபாஸ்கர் விமர்சனம்
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் திமுக அரசு 28 ஆயிரம் ரூபாய் கடன் வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என கூறிய திமுக அரசு, தற்போது, அதில் பாதி பேருக்குத்தான் வழங்குவதாக கூறினார். மேலும், ஆட்சிக்கு வந்து 33 மாதங்களாகி விட்ட நிலையில், கடந்த 5 மாதங்களாகத்தான் உரிமைத் தொகை ழங்கப்படுவதாகவும், எனவே, குடும்ப தலைவிகளுக்கு, தலா ஆயிரம் ரூபாய் வீதம், 28 மாதங்களுக்கும் சேர்த்து, 28 ஆயிரம் ரூபாய் திமுக அரசு கடன் வைத்துள்ளதாக அவர் விமர்சனம் செய்தார். பரிசு பொருள் வழங்க வரும் அமைச்சரிடம் அந்த கடன் தொகையை கேட்டுப் பெறுங்கள் என்றும் சி. விஜயபாஸ்கர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.