தலைமை செயலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு...பையில் கட்டுகட்டாக பணம் - இருவர் கைது

x

தலைமை செயலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு...பையில் கட்டுகட்டாக பணம் - இருவர் கைது

சென்னை, தலைமைச் செயலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கண்காட்சி நடத்த அனுமதி கோரியவரிடம், கண்காட்சி மேல் பிரிவு கணக்காளர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அலுவலக உதவியாளர் மணிவாசகம் பணத்தை பெறும் போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். மேலும் கணக்காளர் அன்பரசன் பையில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்