"ரொம்ப நல்லா இருக்கு" - குழந்தையாக மாறிய மேயர்

x

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசின் தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கண்காட்சியை தஞ்சை மேயர் ராமநாதன் துவக்கி வைத்தார். கண்காட்சியை ரசித்துப் பார்த்து வந்த ராமநாதன், அங்கு வைக்கப்பட்டிருந்த சிட்டுக்குருவி மண்பொம்மையை ஆசை ஆசையாக எடுத்து, அதை ஊதி ஒலி எழுப்பச் செய்து ரசித்தார்... தன்னிடம் பணம் வாங்க மேலாளர் மறுத்த நிலையில், மேயர் பணத்தை மேசையில் வைத்து விட்டு, சிட்டுக் குருவி ஒலி எழுப்பியபடி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றார்..


Next Story

மேலும் செய்திகள்