மாறி மாறி வெளியாகும் வீடியோக்கள்... அதிமுக - திமுகவினர் இடையே முற்றும் மோதல்

x

மாறி மாறி வெளியாகும் வீடியோக்கள்... அதிமுக - திமுகவினர் இடையே முற்றும் மோதல்

வேலூர் அதிமுக மாவட்ட செயலாளரின் குற்றச்சாட்டிற்கு, தேர்தலில் தோற்றுப் போனவருக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என திமுக எம்.எல்.ஏ தெரிவித்திருப்பது, இரு கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

வேலூர் மாநகராட்சியின் சின்ன அல்லாபுரம் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி விவகாரத்தில் அதிமுக - திமுகவினரிடையேயான மோதல் முற்றியிருக்கிறது..

இந்த குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட தண்ணீர்.. சேறும் சகதியுமாக கழிவுநீர் போல இருப்பதாக கூறி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு குற்றம் சுமத்தினார் வேலூர் அதிமுக மாவட்ட செயலாளரான எஸ் ஆர் கே அப்பு..

சேறும் சகதியுமாக, கழிவுநீர் போல குடிநீர் இருப்பதாக புகார்

தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் இரவே நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டது...

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் மாநகர திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான கார்த்திகேயன் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.பாபுவை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்...

எம்.எல்.ஏவின் இந்த விமர்சனம் இரு கட்சியினரிடையும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு பதிலடி கொடுத்திருக்கிறார்.

இரு பெரும் கட்சியினரிடையேயான இந்த மோதலும், சலசலப்பும் வேலூர் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்