"உணவில் மருந்து.. 7 முறை கருக்கலைப்பு... சீமான் ஏழு கொலை பண்ணிருக்காரு.." - வீரலட்சுமி பகீர் பேட்டி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக, நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில், சம்மன் அனுப்பிய நிலையில், சீமான் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, விஜயலட்சுமிக்கு பாதுகாப்பு தர வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி, கோயம்பேடு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகை விஜயலட்சுமிக்கு உணவில் மருந்து கலந்துகொடுத்து 7 முறை கருச்சிதைவு செய்துள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
Next Story