10 மாதங்களாக வராத சம்பளம்.. ஊர் முழுக்க பெருத்த அவமானம் - வாச்சாத்தியை சேர்ந்த VAO விபரீத முடிவு
அரூரை அடுத்த வாச்சாத்தியை சேர்ந்தவர் சிவலிங்கம். கிராம நிர்வாக அலுவலரான இவர், ஓசூர், சூளகிரி, நடுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வந்துள்ளார். பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் உள்ளிட்ட குழப்பங்களால் கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில், வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு, கடன் கொடுத்தவர்கள் அவமானப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், மனவிரக்தியில் இருந்த சிவலிங்கம், கடந்த 18ஆம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார். 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், 25ஆம் தேதி உயிரிழந்துள்ளார். தற்போது, சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில், கடனையும் செலுத்த முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ள சிவலிங்கத்தின் குடும்பத்தினர், 10 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story