SP, 3 DSP, 3 இன்ஸ்பெக்டர், 7 SI சேர்ந்து விசாரிக்கும் அளவுக்கு திருப்பத்தூரை நடுங்கவிட்ட படுகொலை
திருப்பத்தூர் மாவட்டம் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த தனபாக்கியம் என்ற 90 வயது மூதாட்டி, இன்று காலை முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார். அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, தாலி, 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை மாயம் ஆகி இருந்ததை கண்டு உறவினர்கள்அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூதாட்டி கழுதை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். உடன் 3 டிஎஸ்பிகள், 3 இன்ஸ்பெக்டர்கள், 7 சப் இன்ஸ்பெக்டர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.
Next Story