Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (06-11-2023) | Morning Headlines | Thanthi TV

x

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு...

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது...

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்...

நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜர்...

தான் பேசாததை எல்லாம் பேசியதாக கூறி மன்னிப்பு கேட்க சொன்னார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருப்பேன் எனவும் திட்டவட்டம்...சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்...

குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது மற்றும் ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் எனவும் உயர் நீதிமன்றம் கண்டிப்பு...


Next Story

மேலும் செய்திகள்