வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள்
மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பணிக்காக மணிப்புரம், தேத்துறை உள்ளிட்ட 11 கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்து 174 ஏக்கர் விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினமான இன்று சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிடக் கோரி தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
Next Story