தாய், தந்தையை அடுத்தடுத்து இழந்த பால் மனம் மாறா சிறு பிள்ளைகள் - தாலுகா ஆபிஸ் வந்து செய்த செயல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் தனது பாட்டியுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து, கோரிக்கை மனு அளித்தனர்.
ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த தம்பதி பழனி மற்றும் சசிகலா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பழனி உயிரிழந்தார். கடந்த ஆண்டு சசிகலாவும் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் தம்பதியின் 6 வயது மகளும், 4 வயது மகனும், தனது பாட்டியுடன் வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். அவர்கள், பெற்றோர் உயிரிழப்புக்கான விபத்து நிவாரண நிதி கேட்டு, மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், உடனடியாக மனு மீது தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
Next Story