காரை திறந்து வைத்து 12 பேருக்கு பயிற்சி கொடுத்த டிரைவிங் ஸ்கூல் - தீயாய் பரவிய காட்சிகள்
காரை திறந்து வைத்து 12 பேருக்கு பயிற்சி கொடுத்த டிரைவிங் ஸ்கூல் - தீயாய் பரவிய காட்சிகள்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனமே விதிகளை மீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி கதவுகளை 6 பேர் மட்டுமே பயணிக்கும் காரில், 12 பேரை அமரவைத்து ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் கதவுகளை திறந்துவிட்டு, 12 பேரையும் காருக்குள் அமர்த்தி கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த தனியார் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நிறுவனம் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story