சென்னை அருகே அத்தை கழுத்தில் கத்தியை இறக்கிய மருமகன்..அதிர்ச்சியில் மக்கள்

x

பொன்னேரியில் குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி-யை அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விவேக் . கூலி தொழிலாளியான விவேக்கிற்கும் இவரது அத்தையான லதா என்பவரது மகள் சௌமியாவிற்கும் கடந்த 3ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சௌமியா மற்றொரு நபரை காதலித்து, விவேக்கிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். இதனை தனது அத்தை லதாவிடம் விவேக் முறையிட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லதாவின் கழுத்தில் குத்தியுளளார் விவேக். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு ஆபத்தான நிலையில், லதாவை மருத்துவமனை கொண்டு சென்றனர். பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் லதா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, விவேக் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்