விளையாட சென்ற சிறுவர்கள்.. உடல் உப்பி கிடந்ததால் கதறிய பெற்றோர்
விளையாட சென்ற சிறுவர்கள்.. உடல் உப்பி கிடந்ததால் கதறிய பெற்றோர்
உடுமலைப்பேட்டை அருகே விளையாட சென்ற 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் பண்ணைக்கிணறை சேர்ந்த 2 சிறுவர்கள், நண்பர்களுடன் வெளியே விளையாட சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே பண்ணைக்கிணறு அருகேயுள்ள குட்டையில், 2 சிறுவர்களும் நீரில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story