ஹாஸ்பிட்டல் பாத்ரூமில் நெருப்பில்லாமல் கிளம்பிய புகை.. அலறியடித்து வெளியே ஓடிய நோயாளிகள்

x

தலைமை மருத்துவர் அருணா குமாரி விரைந்து செயல்பட்டு, தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உடனடியாக வரவழைத்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த சில நோயாளிகளை உடனடியாக வெளியேற்றி, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்... இதனிடையே தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்குள் நுழைந்து சிலிண்டர்கள் இருக்கும் பகுதியில் ஆய்வு செய்தனர்... அதன் பின் கழிவறை பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது... விசாரணை மேற்கொண்டதில் வயிற்றுப் போக்கால் சில நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிக்கடி கழிவறைகளை தூய்மை பணியாளர் சுத்தம் செய்து வந்துள்ளார்... இதை அறியாத நோயாளி ஒருவர் பிளீச்சிங் பவுடர் மற்றும் லைசால் மூலம் சுத்தப்படுத்தப்பட்ட கழிவறையில் தண்ணீர் ஊற்றியதன் விளைவாக ரசாயன மாற்றம் உருவாகி புகை பரவியுள்ளது... 3 மணி நேரத்திற்குப் பிறகு புகை பரவல் குறைந்த நிலையில் அதன்பிறகு நோயாளிகள் மீண்டும் மருத்துவமனைக்குள் அழைத்து வரப்பட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்