ஆட்களை திரட்டி சமூக ஆர்வலரை கொடூரமாக தாக்கிய அதிமுக பிரமுகர் - தீயாய் பரவும் வீடியோ காட்சிகள்

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், ராக்கிபாளையத்தை சேர்ந்தவர் தனபால். இவரது வீட்டின் எதிரில் இருந்த மரத்தை, அதிமுக பிரமுகர் விபிஎன் குமார் என்பவரின் ஆட்கள் வெட்டியுள்ளனர். தனபால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக பிரமுகர் விபிஎன் குமார், தனது ஆட்களை அழைத்துச் சென்று, வீட்டில் இருந்த தனபாலை தாக்கியுள்ளார். தனபால், காயமடைந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்