பரபரப்பாக பேசப்பட்ட குடும்ப கொலை.. தூத்துக்குடி பெண்ணுக்கு சவுக்கடி தீர்ப்பு
தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளியை சேர்ந்த கண்ணன் என்பவர், கடந்த 2013 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். கண்ணனின் பக்கத்து வீட்டுக்காரரான சுயம்பு லிங்கம் என்பவரே தன் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து இளைஞரை கொலை செய்த நிலையில், வழக்கு கடந்த 10 வருடங்களாக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், சுயம்புலிங்கம் உயிரிழந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப் நிக்கோலஸ், சுயம்புலிங்கத்தின் மனைவி மல்லிகா மற்றும் மகன் அழகு லிங்கத்திற்கு ஆயுள்தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Next Story