இதுல நம்ம தான் No.1..தமிழகத்தை துரத்தும் சோகம்..வெளியான அதிரவைக்கும் தகவல்
- மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு, இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளின் ஆண்டறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது.
- இந்த அறிக்கையின்படி, கடந்த 2022- ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 4 லட்சத்து 61 ஆயிரத்து 312 சாலை விபத்துகள் அரங்கேறியுள்ளன.
- இதில், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும், நான்கரை லட்சத்துக்கு அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது முந்தைய ஆண்டை விட அதிகம் என கூறப்பட்டுள்ளது.
- இந்த ஒன்றரை லட்ச உயிரிழப்பில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில்
- உயிரிழந்துள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
- இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமாகவும், இறப்புகளின் எண்ணிக்கை 9.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ள நிலையில், இவையனைத்தும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டிற்கான சாலை விபத்துகளின் ஆண்டறிக்கையில், சுமார் 64 ஆயிரத்து 105 சாலை விபத்துக்கள் அரங்கேறி, தமிழகம் முதலிடத்தில் இருக்கும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்த விபத்துகளில் சுமார் 18 ஆயிரம் வரையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், இது கடந்த ஆண்டு ஒப்பிட்டு பார்க்கையில், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு உயிரிழப்புகளாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
- 2022 - ஆம் ஆண்டறிக்கையின் படி விபத்துகளின் அடிப்படையில் தமிழகம் முதல் இடத்திலும், உயிரிழப்புகளின் அடிப்படையில் உத்தரபிரதேசம் முதலிடத்திலும் உள்ளன..
- உயிரிழப்புகளின் அடிப்படையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது..
- மேலும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி சுமார் 14 ஆயிரத்திற்கான அதிகமான விபத்துகள் இந்தியாவில் அரங்கேறியிருப்பதும், அதில் 6 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதுமாக அதிர்ச்சி தகவலை ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது..
- சாலை விபத்துக்களை தடுக்க, வலுவான நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் உறுதி பூண்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான சாலை விபத்துக்களின் ஆண்டறிக்கை சாலைப் பாதுகாப்பு துறையின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்புமிக்க ஆதாரமாக இருக்கும் எனகூறப்படுகிறது.
Next Story