திருவண்ணாமலை கோயில் அருகே அச்சத்தில் உறைந்து நின்ற பக்தர்கள்
தேரடி வீதியில் மண்டை ஓடுகளோடு, சுமார் 2 மணி நேரமாக கார் ஒன்று நின்றிருந்தது. வாகன எண் பலகையில், அகோரி நாகசாது என பெயர் எழுதப்பட்டிருந்தது. காரில் மண்டை ஓடுகளோடு இருப்பதை பார்த்து அச்சம் அடைந்த பக்தர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், காரில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, அகோரியை வரவழைத்து விசாரித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில், அந்த நபர் ரிஷிகேஷை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அகோரி மீது வழக்கு பதிவு செய்யாமல் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் பெற்றுக்கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.
Next Story